75-ம் ஆண்டு சுதந்திர தின விழா


75-ம் ஆண்டு சுதந்திர தின விழா
x

75-ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

வேலூர்

குடியாத்தம் அடுத்த கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் சார்பில் 75-ம் ஆண்டு சுதந்திர தின பவள விழா நடைபெற்றது. பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். கல்லூரிகளின் நிர்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியன், கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், பரிசுகள் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன. கலை, அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், தலைமை ஆசிரியர், உதவித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள், பள்ளி ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை உடற்கல்வி பேராசிரியர்கள் ஆர்.ரஞ்சிதம், ஆர்.ஞானக்குமார், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஜெ.திருமகள், கா.ராஜீவ் ஆகியோர் செய்து இருந்தனர். மாணவ ஒருங்கிணைப்பாளர் ஜா.ஜெயக்குமார் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.


Next Story