75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மோட்டார்சைக்கிள் ஊர்வலம்
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மோட்டார்சைக்கிள் ஊர்வலம்
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டியில் பா.ஜ.க. சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மோட்டார்சைக்கிள் ஊர்வலம் திருவாரூர் மாவட்ட மேலிட பார்வையாளர் பேட்டை சிவா தலைமையில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் சிவக்குமார், மாவட்டச் செயலாளர் வினோத், மாவட்ட இளைஞரணி செயலாளர் ரகுமாறன், மாநில செயற்குழு உறுப்பினர் ராகவன், ஒன்றிய தலைவர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் வேலூரில் தொடங்கி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ெரயில்வே ஸ்டேஷன் சாலை, மன்னார்குடி சாலை, தெற்கு வீதி, கீழவீதி, முத்துப்பேட்டை சாலை, அண்ணாநகர், நெடும்பலம் வழியாக வந்தது.
இதேபோல் நீடாமங்கலம் வடக்கு ஒன்றியத்தில் பா.ஜ.க. சார்பில் தேசிய கொடி ஏந்திய மோட்டார்சைக்கிள் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு வடக்கு ஒன்றிய தலைவர் வாஞ்சிமோகன் தலைமை தாங்கினார். இதில் பா.ஜ.க. பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஊர்வலம் வடக்கு ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்கள் வழியாக வந்தது.