77 வயதிலும் நீச்சல் பயிற்சி அளிக்கும் மூதாட்டி


77 வயதிலும் நீச்சல் பயிற்சி அளிக்கும் மூதாட்டி
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் 77 வயதிலும் நீச்சல் பயிற்சி அளிக்கும் மூதாட்டியை வீட்டுக்கே சென்று போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

நாகப்பட்டினம்

நாகையில் 77 வயதிலும் நீச்சல் பயிற்சி அளிக்கும் மூதாட்டியை வீட்டுக்கே சென்று போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

நீச்சல் பயிற்சி

நாகை முகமதுயார் தெருவை சேர்ந்தவர் ராமாமிர்தம் (வயது 77). இவர் நாகை மாவட்ட விளையாட்டு மைதானம், தனியார் விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்களில் நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார்.

மன உறுதி, விடாமுயற்சி இருந்தால் எந்த வயதிலும் எதுவும் சாத்தியம் என்பது போல மூதாட்டி ராமாமிர்தம் உற்சாகத்துடன் நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார்.

மூதாட்டிக்கு சூப்பிரண்டு பாராட்டு

சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் என பலருக்கும் தனக்கான ஓய்வு நேரங்களில் அவர் நீச்சல் கற்றுக் கொடுக்கிறார். 77 வயதிலும் ராமாமிர்தம் நீச்சல் பயிற்சி கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதை அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், மூதாட்டி ராமாமிர்தம் வீட்டுக்கே நேரில் சென்று அவரை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.


Next Story