7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு
7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு
குளச்சல்:
திங்கள்நகர் அருகே வெட்டுக்காட்டுவிளையை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 25), வெல்டிங் தொழிலாளி. இவர் வேலைக்கு சென்ற இடத்தில், ஒரு வீட்டில் குழந்தைக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்த பகுதி குழந்தைகள் அங்கு விளையாடி கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த பிரசாந்த் 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம் செல்போனைக்காட்டி 'நான் உனக்கு போனில் பேய் படம் காட்டுகிறேன்' எனக்கூறி மாடிக்கு அழைத்து சென்றார். அங்கு சென்றதும் பிரசாந்த் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார். அப்போது திடீரென மாடிக்கு வந்த சிறுமியின் அக்கா சத்தம் போட்டார். உடனே பிரசாந்த் அங்கிருந்து ஓடி விட்டார்.
இது குறித்து சிறுமியின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பிரசாந்த் மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று பிரசாந்த் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.