அனுமதியின்றி மணல் அள்ளிய 8 பேர் கைது


அனுமதியின்றி மணல் அள்ளிய 8 பேர் கைது
x

அனுமதியின்றி மணல் அள்ளிய 8 பேர் கைது

திருவாரூர்

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையை அடுத்த கோபாலசமுத்திரம் கோரையாறு சட்ரஸ் அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தி்ற்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உதயமார்த்தாண்டபுரம் கீழகாடு கிராமத்தை சேர்ந்த சிவபிரகாசம் (வயது38), பள்ளியமேடு கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் (35), வீரன்வயல் கிராமத்தை சேர்ந்த ஜீவானந்தம் (54), முருகானந்தம் (45), தங்கவேல் (52), கழுவங்காடு கிராமத்தை சேர்ந்த வீரநாதன் (28), விஜயகுமார் (50), அகிலன் (22) ஆகிய 8 பேர் கோரையாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story