பந்தலூரில் 8 செ.மீ. மழை பதிவானது


பந்தலூரில் 8 செ.மீ. மழை பதிவானது
x

பந்தலூரில் 8 செ.மீ. மழை ஒரே நாளில் பதிவானது.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பந்தலூரில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் பந்தலூர் வருவாய் அலுவலகம் அருகே உள்ள சாலையில் வெள்ளம் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர். பந்தலூரில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 8 சென்டி மீட்டர் மழை பதிவானது. தொடர் மழை காரணமாக பொன்னானி, சோலாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கால்வாய்களில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேலும் பந்தலூர்-கூடலூர் உள்பட பல்வேறு சாலைகளில் உள்ள குழிகளில் மழை வெள்ளம் நிரம்பி காட்சி அளித்தது. இதனால் அவ்வப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story