ரூ.8¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்


ரூ.8¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 20 July 2023 1:00 AM IST (Updated: 20 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

செந்துறையில் ரூ.8¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.

திண்டுக்கல்

நத்தம் அருகே செந்துறை புதிய பஸ்நிலையத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். வேலுச்சாமி எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரத்தினகுமார், பழனிச்சாமி (நத்தம்), தர்மராஜன், மோகன் (சாணார்பட்டி), வெள்ளிமலை (சிறுமலை), நகர செயலாளர் ராஜ்மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர் முத்துகுமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் ஆர்.டி.ஓ. கமலக்கண்ணன் வரவேற்றார். விழாவில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு, 3,484 பயனாளிகளுக்கு ரூ.8.70 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் செந்துறை, சிறுகுடி ஆகிய ஊராட்சிகளுக்கு 2 டிராக்டர்கள் வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சர் அர.சக்கரபாணி ேபசுகையில், தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். தகுதியான இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் ரூ.20 லட்சம் வரை கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன என்றார்.

இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கங்காதேவி, மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சவரிமுத்து (செந்துறை), ராஜேஸ்வரி அழகர்சாமி (குடகிப்பட்டி), கோகிலவாணி வீரராகவன் (சிறுகுடி), தேன்மொழி முருகன் (பிள்ளையார்நத்தம்), ஒன்றிய கவுன்சிலர் பாக்கியலெட்சுமி சிவஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story