நாய்கள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் செத்தன


நாய்கள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் செத்தன
x

நாய்கள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் செத்தன.

திருச்சி

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வைரிசெட்டிப்பாளையம் உப்பிலியர் தெருவை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 54). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் தோட்டத்தில் பணிகளை முடித்து விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மீண்டும் நேற்று காலை தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்த 8 ஆடுகளை தெரு நாய்கள் கடித்து குதறியதில் அனைத்தும் செத்து கிடந்தன. இதனை பார்த்த வெள்ளையன் அதிர்ச்சியடைந்தார். இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும். வைரிசெட்டிப்பாளையத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், நாய்களை அப்புறப்படுத்த பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இனி இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதியில் நடைபெறாத வண்ணம் தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story