ரசாயனம் குடித்த 8 ஆடுகள் சாவு


ரசாயனம் குடித்த 8 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 21 July 2023 12:45 AM IST (Updated: 21 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

நாகை அருகே ரசாயனம் குடித்த 8 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.

நாகப்பட்டினம்

நாகை அருகே ரசாயனம் குடித்த 8 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.

நான்கு வழிச்சாலை பணிகள்

நாகை-விழுப்புரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சிமெண்டு கான்கிரீட் கலவை தயாரிக்கும் நிறுவனம் நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே மரக்கான்சாவடியில் அமைந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் வாசலில் லாரிகளில் புகையை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் கெமிக்கலை(ரசாயனம்) பேரலில் நிரப்பி வைத்துள்ளனர்.

ரசாயனம் குடித்த 8 ஆடுகள் சாவு

இந்த நிலையில் அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள், திறந்து கிடந்த பேரலில் இருந்த ரசாயனத்தை குடித்தன. சிறிது நேரத்தில் 8 ஆடுகளும் ஆங்காங்கே வயல்வெளியில் இறந்து கிடந்தன.

இதற்கிடையில் ஆடுகளின் உரிமையாளர்கள் தங்களது ஆடுகளை காணாததால் தேடினர். அப்போதுதான் ரசாயனம் குடித்து ஆங்காங்கே ஆடுகள் இறந்து கிடந்தது அவர்களுக்கு தெரிய வந்தது.

முற்றுகை போராட்டம்

இதையடுத்து ரசாயனம் இருந்த பேரலை மூடி வைக்காமல் அலட்சியமாக திறந்து வைத்ததாக கூறி அந்த நிறுவனத்தின் முன்பு ஆடுகளின் உரிமையாளர்கள், இறந்த ஆடுகளுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story