ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் காயம்
செஞ்சி அருகே ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் காயமடைந்தனா்.
செஞ்சி
செஞ்சி அருகே உள்ள சென்னாலூரை சேர்ந்த லோகநாதன் (55), சத்தியா(30), பாக்கியலட்சுமி(50), பிரியா(30), ராணி(40), புகழரசி(24), மாரியம்மாள்(45) ஆகியோர் செஞ்சிக்கு வந்திருந்தனர். பின்னர் இவர்கள் அனைவரும் ஒரு ஆட்டோவில் செஞ்சியில் இருந்து சென்னாலூருக்கு புறப்பட்டனர். ஆட்டோவை முருகன் ஓட்டினார்.
இந்த ஆட்டோ ஒதியத்தூரில் சென்றபோது குரங்கு குறுக்கே ஓடியது. உடனே டிரைவர் முருகன் பிரேக் பிடித்தார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் முருகன் உள்பட 8 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது பற்றி அறிந்ததும் சென்னாலூரை சேர்ந்த சூர்யா(21), நவீன்(22), தமிழரசன்(24) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் 3 பேரும் அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர். அப்போது விநாயகபுரத்தில் சாலையோரம் நின்றிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் காயமடைந்த 3 பேருக்கும் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.