ஓடும் ரெயில்களில் 8 கிலோ கஞ்சா, ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ஓடும் ரெயில்களில் 8 கிலோ கஞ்சா, ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

ஓடும் ரெயில்களில் கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா மற்றும் ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளை காட்பாடி ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேலூர்

ஓடும் ரெயில்களில் கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா மற்றும் ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளை காட்பாடி ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

8 கிலோ கஞ்சா பறிமுதல்

அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தன்பாத்தில் இருந்து ஆலப்புழை வரை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று நள்ளிரவு 1.50 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையம் வந்தது.

முதல் பிளாட்பாரத்தில் நின்ற ரெயில் பெட்டிகளில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மனோகர் மற்றும் ஏட்டுகள் முத்துவேல், பாபு ஆகியோர் ஏறி சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து பார்த்தனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. மொத்தம் 8 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஒரு டன் ரேஷன் அரிசி ஓடும் ரெயில்களில்

சென்னையில் இருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ரெயில் நிலையம் வந்தது. அந்த ரெயில் பெட்டிகளில் ரெயில்வே போலீசார் ஏறி சோதனை நடத்தினர். அப்போது ரெயில் பெட்டிகளில் ஆங்காங்கே இருக்கைகளின் கீழே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை கண்டு பிடித்தனர். 20 சிறிய மூட்டைகளில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை உணவு பொருள் தடுப்பு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story