ரெயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்


ரெயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்
x

அரக்கோணத்தில் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

வட மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்களின் மூலம் தமிழகத்திற்கு கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தலை தடுக்கும் வகையில் ரெயில்களிலும், ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி ஜார்கண்ட் மாநிலம் டாட்டா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்த போது அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரெயில் பெட்டிகளில் சோதனை நடத்தினர்.

அப்போது பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது சுமார் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story