ரூ.8¾ லட்சத்தில் 48 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


ரூ.8¾ லட்சத்தில் 48 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் நடந்த மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், ரூ.8¾ லட்சத்தில் 48 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் வழங்கினார்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் நடந்த மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், ரூ.8¾ லட்சத்தில் 48 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

நீலகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் தின விழா ஊட்டியில் நேற்று நடைபெற்றது. விழாவில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்துகொண்டு 3 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் தலா ரூ.78,850 வீதம் ரூ.2,36,550 மதிப்பிலும், திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் தலா ரூ.50,000 வீதம் 2 பேருக்கு ரூ.1,00,000 மதிப்பிலும் உள்பட மொத்தம் 48 பேருக்கு ரூ.8,69,950 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்த டாக்டர்கள், வங்கி மேலாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சார்ந்த 10 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த 23 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கப்பட்டது.

மஞ்சப்பை வழங்கும் எந்திரம்

நிகழ்ச்சியில் ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ஜெயராணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்யராஜா, ஊட்டி நகராட்சி தலைவர் வாணிஸ்வரி, ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மஞ்சப்பை வழங்கும் எந்திரம் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மஞ்சப்பை வழங்கும் எந்திரத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்து பார்வையிட்டார். எந்திரத்தில் ரூ.10 செலுத்தினால், மஞ்சப்பை பெற முடியும். நீலகிரி மாவட்டத்தில் மேலும் 20 இடங்களில் மஞ்சப்பை வழங்கும் எந்திரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள், பலர் கலந்துகொண்டனர்.


Next Story