8 மாத காப்பிணி தற்கொலை
சிதம்பரத்தில் 8 மாத காப்பிணி தற்கொலை
கடலூர்
சிதம்பரம்
சிதம்பரம் அண்ணாமலை நகர் வசம்புத்தூரை சேர்ந்தவர் ராஜா. இவரும், விஜயலட்சுமியும்(வயது 23) காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது விஜயலட்சுமி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனிடையே ராஜா, வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்ல முடிவு செய்திருந்தார். இந்த நிலையில் விஜயலட்சுமி நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டுக்கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை விஜயலட்சுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story