நன்னடத்தை பிணையை மீறியவருக்கு 8 மாதம் சிறை
நன்னடத்தை பிணையை மீறியவருக்கு 8 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டம் பத்தமடை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 24). இவரிடம் இருந்து சேரன்மாதேவி 2-ம் வகுப்பு நிர்வாக துறை நடுவர் மூலம் ஒரு வருடத்திற்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டது. அதன் பின்பும் அடிதடி வழக்கில் சரவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நன்னடத்தை பிணையை மீறி சரவணன் குற்ற செயலில் ஈடுபட்டதாக சேரன்மாதேவி இன்ஸ்பெக்டர் சுபாஷ் ராஜன், சேரன்மாதேவி 2-ம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவர் முன்பு அறிக்கை சமர்ப்பித்தார். அதன் மீது விசாரணை நடத்திய நடுவர், சரவணனை 8 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story