மேலும் 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


மேலும் 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

பா.ஜனதா நிர்வாகி கொலை வழக்கில் மேலும் 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை மூளிக்குளத்தில் பா.ஜனதா நிர்வாகி ஜெகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி பிரபு உள்ளிட்ட 4 பேரை பாளையங்கோட்டை போலீசார் கடந்த 26-ந் தேதி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய தச்சநல்லூரை சேர்ந்த சுப்பையா மகன் முத்துபாண்டி (வயது 30), பாளையங்கோட்டையை சேர்ந்த உச்சிமாகாளி மகன் மாணிக்கராஜா (27), முருகன் மகன் பாஸ்கர் (22), அன்பு மகன் சந்துரு (23), அந்தோணி மகன் அனிஸ்பர் என்ற அனிஸ் (28), பேச்சிமுத்து மகன் வள்ளிக்கண்ணு என்ற வசந்த் (21), முருகன் மகன் ஜீவா என்ற மாரிச்செல்வம், உலகநாதன் மகன் முத்துஇசக்கி (24) ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா பரிந்துரையின்பேரில் போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்படி அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆவணங்கள் போலீசார் சிறையில் வழங்கினார்கள்.


Next Story