பட்டா கத்தியால கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 8 பேர் கைது


பட்டா கத்தியால கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 8 பேர் கைது
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே பட்டா கத்தியால கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே உள்ள வெள்ளிமேடுபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(வயது 21). இவர், தனது பிறந்தநாளை கடந்த 14-ந் தேதி இரவு கொண்டாடினார். இதற்காக அங்கன்வாடி முன்பு பட்டா கத்தியால் கேக் வெட்டி தனது நண்பர்களுக்கு ஊட்டிவிட்டார். இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் கஞ்சா வழக்கில் 2 முறை கைது செய்து சிறைக்கு சென்றவரான சூர்யா(25) என்பவரும் பங்கேற்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இது குறித்து வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்(21), குணா என்கிற குணசேகர்(20), சரவணன்(21), பிரகாஷ்(23), விக்கி என்கிற விக்னேஷ் (20), வசந்த்(19), சத்தியமூர்த்தி (23), ராமு என்கிற ராம்குமார் (27) ஆகிய 8 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான சூர்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story