புதுப்பேட்டை அருகேபணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது


புதுப்பேட்டை அருகேபணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது் செய்யப்பட்டனா்.

கடலூர்


புதுப்பேட்டை,

புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அபபோது கோட்லாம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த பவுன்சாமி (வயது 40), ராஜசேகர் (42), பிரபு (38), அம்மாப்பேட்டை தேவநாதன் (40), பனப்பாக்கம் மணிகண்டன் (49) ஆகியோர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். இதைபார்த்த போலீசார், அவா்களை பிடித்து கைது செய்தனர். இதேபோல் வாணியம்பாளையம் மாரியம்மன் கோவில் பின்புறம் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (23), ரஞ்சித்குமார் (21), அஜித்குமார் (23) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story