வெறிநாய் கடித்து 8 பேர் காயம்


வெறிநாய் கடித்து 8 பேர் காயம்
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வெறிநாய் கடித்து 8 பேர் காயம் அடைந்தனர்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோளையானூர் ஊராட்சிக்குட்பட்ட பூனையானூரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் வெறிநாய்கள் தொல்லை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக வீதிகளில் நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை துரத்தி சென்று கடிக்கின்றன.

நேற்று மட்டும் அந்த கிராமத்தை சேர்ந்த ஜோதி (வயது 40), சுகந்தி (42), சின்னகண்ணு(60) உள்பட 8 பேரை தெருநாய்கள் கடித்தன. இவர்கள் அனைவரும் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே இந்த பகுதியில் தெருநாய்கள் மற்றும் வெறிநாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story