விபத்தில் 8 பேர் காயம்
திருச்சுழி அருகே விபத்தில் 8 பேர் காயம் அடைந்தனர்.
திருச்சுழி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியிலிருந்து மதுரைக்கு தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை ரமேஷ் என்பவர் ஓட்டி வந்தார். இந்தநிலையில் திருச்சுழி அருகே உள்ள சிலுக்குப்பட்டிக்கு வந்து போது பிரசாந்த் என்பவர் ஓட்டி வந்த கார் பஸ்சை முந்திச்செல்ல முயன்ற போது திடீரென காரும், பஸ்சும் மோதிக்கொண்ட விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பரளச்சியை சேர்ந்த மணிமேகலை (வயது28), குணால்(2), சிவகாசியை சேர்ந்த பிச்சையம்மாள்(50), அருப்புக்கோட்டையை சேர்ந்த சந்திரகலா(44), கோகுலகிருஷ்ணன்(45), செம்பட்டியை சேர்ந்த அழகுராஜா(28) உள்பட 8 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ம.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.