சேலத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


சேலத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x

சேலத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

சேலம்

சேலம் மாநகரில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயஜோதி, செவ்வாய்பேட்டை குற்றப்பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய தங்கராஜ் அதே போலீஸ் நிலைய சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய சாரதா, இரும்பாலை போலீஸ் நிலைய குற்றப்பிரிவுக்கும், செவ்வாய்பேட்டை சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய சண்முகசுந்தரம் அம்மாபேட்டை குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த சிவகுமார், கன்னங்குறிச்சி குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த தனலட்சுமி கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய மகேஸ்வரி அரசு ஆஸ்பத்திரிக்கும், இரும்பாலை குற்றப்பிரிவில் பணியாற்றிய சசிகலா அஸ்தம்பட்டி குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா பிறப்பித்தார்.


Next Story