அம்மன் கோவிலில் 8 பவுன் நகை திருட்டு
ராஜாக்கமங்கலம் அருகே அம்மன் கோவிலில் கதவை உடைத்து 8 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராஜாக்கமங்கலம்,
ராஜாக்கமங்கலம் அருகே அம்மன் கோவிலில் கதவை உடைத்து 8 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அம்மன் கோவில்
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கன்னக்குறிச்சி நடுவூர் பகுதியில் ஈஸ்வரி பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரம்தோறும் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வழிபாடு நடைபெறும். சம்பவத்தன்று பூஜைகள் முடிந்த பின்பு கதவை பூட்டிவிட்டு சென்றனர்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் கோவிலில் கண்காணிப்பு கேமரா அமைப்பதற்காக நிர்வாகிகள் சென்றனர். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நகை திருட்டு
உள்ளே சென்று பார்த்த போது அம்மனுக்கு அணிவித்திருந்த 8 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் கதவை உடைத்து நகையை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
---
(படம் உண்டு)
நகை திருடப்பட்ட கோவிலை படத்தில் காணலாம்.
---------
கோவிலில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்த காட்சி.