5 சிறைகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 8 பேர் விடுதலை


5 சிறைகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 8 பேர் விடுதலை
x

5 சிறைகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 8 பேர் விடுதலை

திருப்பூர்

திருப்பூர்

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் வழிகாட்டுதலின்படி சார்பு நீதிபதி மேகலா மைதிலி தலைமையில் நேற்று சிறைவாசிகளுக்கான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. கோவை மத்திய சிறையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் திருப்பூர் நீதித்துறை நடுவர் பாரதிபிரபா வழக்குகளை விசாரித்தார்.

மேலும் திருப்பூர் மாவட்ட சிறை, பல்லடம், தாராபுரம், உடுமலை கிளைச்சிறைகள் என மொத்தம் 5 அமர்வுகளாக மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் 46 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 10 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. 8 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், சமுதாயத்தில் நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட சிறையில் அவினாசி நீதித்துறை நடுவர் சபீனாவும், பல்லடம் கிளை சிறையில் பல்லடம் நீதித்துறை நடுவர் சித்ராவும், தாராபுரம் கிளை சிறையில் தாராபுரம் நீதித்துறை நடுவர் பிரபுவும், உடுமலை கிளை சிறையில் உடுமலை நீதித்துறை நடுவர் விஜயகுமாரும் வழக்குகளை விசாரித்தனர். விசாரணையின்போது சிறை கண்காணிப்பாளரும், நன்னடத்தை அலுவலர்களும் உடன் இருந்தனர்.

----


Next Story