மது விற்ற 8 பேர் கைது

மது விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது, நச்சலூர் பகுதியை சேர்ந்த பாலு (வயது 45), சேர்வக்காரன் பட்டியை சேர்ந்த பாஸ்கர் (35), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமரன் (40), நஞ்சக்காளி குறிச்சியை சேர்ந்த பழனியம்மாள் (22) வாங்கலை சேர்ந்த பழனியப்பன் (40), நெல்லையை சேர்ந்த துரை (27), நாமக்கல் மோகனூரை சேர்ந்த சுப்பிரமணியன் (65) ஆகிய 7 ேபரும் பல்வேறு இடங்களில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 34 மதுப்பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கரூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சண்முகவடிவேல் தலைமையில் கிடங்கு அடங்கிய குழுவினர் குளித்தலை மற்றும் குளித்தலை சுற்றியுள்ள கிராம பகுதியில் போலி மதுபானம் விற்பனை செய்யப்படுகின்றனவா என்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பணிக்கம்பட்டி பகுதியில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபானங்களை அதிக விலைக்கு ஜீவா என்ற பெண்மணி வீட்டில் ராஜா ( 63) என்பவர் விற்பது தெரியவந்துள்ளது. அங்கு சென்று அதிகாரிகள் அவரிடம் இருந்து 25 மதுபான பாட்டில்கள் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து கரூர் மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிந்து, ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.