சிறப்பு மக்கள் குறை கேட்பு முகாமில் 8 ஆயிரம் மனுக்கள் பெற வேண்டும் தேவராஜி எம்.எல்.ஏ. பேச்சு


சிறப்பு மக்கள் குறை கேட்பு முகாமில் 8 ஆயிரம் மனுக்கள் பெற வேண்டும் தேவராஜி எம்.எல்.ஏ. பேச்சு
x

4 தொகுதியில் நடக்கும் சிறப்பு மக்கள் குறைகேட்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து 8 ஆயிரம் மனுக்கள் பெற வேண்டும் என தேவராஜி எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்தார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

4 தொகுதியில் நடக்கும் சிறப்பு மக்கள் குறைகேட்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து 8 ஆயிரம் மனுக்கள் பெற வேண்டும் என தேவராஜி எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் ஆலங்காயம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தாமோதரன் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் அன்பு வரவேற்றார். ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், மாவட்ட பொறியாளரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தேவராஜ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் 29-ந் தேதி (இன்று) திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியிலும் சிறப்பு மக்கள் குறை கேட்பு முகாம்கள் நடக்கின்றன. இதில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொள்கிறார்.

அந்த மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொண்டு ஜூன் மாதம் 21-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தரும் போது நலத்திட்ட உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே தி.மு.க. நிர்வாகிகள் 4 தொகுதியிலும் பொதுமக்களிடம் இருந்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்-அமைச்சர் வருகையின் போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இதனை தி.மு.க. நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செய்ய வேண்டும்'' என்றார்.

கூட்டத்தில் ஆலங்காயம் ஒன்றியக் குழுத் தலைவர் சங்கீதாபாரி, துணைத் தலைவர் பூபாலன், முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் அசோகன், உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story