8 ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்- பெசன்ட் நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
வாகன ஓட்டிகள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
சென்னை,
சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ;
சென்னை பெசன்ட் நகர், 6-வது அவென்யூ கிழக்கு பகுதியில் 32வது குறுக்கு தெருவில் இருந்து 3-வது பிரதானசாலை சந்திப்பு வரை 'கார் இல்லாத ஞாயிறு' நிகழ்ச்சியானது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 8 வாரங்கள் அதாவது செப்டம்பர் 4, 11, 18, 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய நாட்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மேற்கண்ட பகுதியில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையால் நடத்தப்படும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடும் பொது மக்களுக்கு இந்த பகுதி பயன்படுத்தப்படும். இந்நிகழ்ச்சிக்காக பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
7-வது நிழற்சாலையில் இருந்து 6-வது நிழற்சாலை வரை எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல உத்தேசித்து உள்ள வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் அவை இலக்கை அடைய 16-வது குறுக்குத் தெரு வழியாக 2-வது நிழற்சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.
16-வது குறுக்குத் தெருவில் இருந்து 6-வது நிழற்சாலையை நோக்கிச் செல்ல வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.மேலும் அவை 2-வது நிழற்சாலை மற்றும் 16-வது குறுக்குத் தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். 3-வது மெயின் ரோட்டில் இருந்து 6-வது நிழற்சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு, 3-வது மெயின் ரோடு மற்றும் 2-வது நிழற்சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும் 4-வது மெயின் ரோடு மற்றும் 5-வது நிழற்சாலை யில் இருந்து 6-வது நிழற் சாலை வழியாக எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அவை மேலும் 4-வது மெயின் ரோடு மற்றும் 5-வது நிழற்சாலை வழியாக திருப்பி விடப்படும். வாகன ஓட்டிகள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.