80 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


80 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 80 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் வேடப்பட்டியில் ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக, போலீஸ் சூப்பிரண்டு தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அந்த வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது 8 மூட்டைகளில் 80 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. இதையடுத்து அவற்றை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஹரிபாலன் (வயது 45) என்பவரை பிடித்து தெற்கு போலீசாரிடம் தனிப்படையினர் ஒப்படைத்தனர். அதேபோல் 80 கிலோ புகையிலை பொருட்களையும் ஒப்படைத்தனர். இதையடுத்து தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story