காணாமல் போன ரூ.12 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு


காணாமல் போன ரூ.12 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் காணாமல் போன ரூ.12 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்களை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நிஷா வழங்கினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் காணாமல் போன ரூ.12 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்களை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நிஷா வழங்கினார்.

80 செல்போன்கள் மீட்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போனதாகவும், திருட்டுப்போனதாகவும், வழிப்பறி செய்யப்பட்டதாகவும் பொதுமக்கள், புகார்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா மயிலாடுதுறை மாவட்ட எல்லைக்குள் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

அதன்பேரில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் தலைமையிலான சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன், ஏட்டு சுதாகர், முதல்நிலை போலீசார் ஜெயக்குமார், ரேணுகா, ரவிச்சந்திரன், மற்றும் போலீசார் எழிலன் ஆகியோர் விரைந்து விசாரணை மேற்கொண்டு செல்போன்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் அடிப்படையில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் மீட்கப்பட்டன.

உரியவர்களிடம் ஓப்படைப்பு

இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மேலும் இந்த செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க உதவியாக செயல்பட்ட போலீசாருக்கு அவர் பாராட்டுகளை தெரிவித்தார்.அப்போது போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story