கேரளாவுக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:45 PM GMT)

குழித்துறை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி

களியக்காவிளை,

குமரி மாவட்டத்தில் களியக்காவிளை எல்லை சோதனை சாவடிகள் வழியாக தொடர்ந்து ரேஷன் அரிசி, மானிய விலை மண்எண்ணெய் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க போலீசார் இரவு, பகலாக தீவிர ரோந்து பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், நேற்று அதிகாலையில் குழித்துறை அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை மடக்கினர். ஆனால் போலீசாரை கண்டதும் காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு டிைரவர் தப்பியோடி விட்டார். இதையடுத்து காரில் சோதனை செய்தபோது மூடைகளில் சுமார் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அந்த ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து அரிசியை காப்புக்காடு அரசு குடோனிலும், காரை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story