மார்த்தாண்டம் அருகே காரில் கடத்திய 800 கிேலா ரேஷன் அரிசி பறிமுதல்
மார்த்தாண்டம் அருகே காரில் கடத்திய 800 கிேலா ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி
நாகர்கோவில்,
மார்த்தாண்டம் அருகே காரில் கடத்திய 800 கிேலா ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி பறிமுதல்
குமரி மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி தலைமையில் போலீசார் நேற்று மார்த்தாண்டம் அருகே உள்ள சிராயன்குழி சி.எஸ்.ஐ. ஆலயம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சிறு, சிறு மூடைகளில் மொத்தம் 800 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதைதொடர்ந்து காருடன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடா்பாக கார் டிரைவர் திருவனந்தபுரம் பிலாமூட்டுகடா பகுதியை சோ்ந்த கிரீஷ் (வயது 28) மற்றும் அசோக் (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story