மது, சாராயம் விற்ற 81 பேர் கைது


மது, சாராயம் விற்ற 81 பேர் கைது
x

திருவள்ளுவர் தினத்தன்று மது, சாராயம் விற்ற 81 பேர் கைது ெசய்யப்பட்டனர்.

வேலூர்

திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் மது, சாராயம் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், சட்டம்-ஒழுங்கு போலீசார் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை, சோதனையில் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வாகன தணிக்கை மற்றும் சோதனையில் மது, சாராயம் விற்றதாக 89 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் 81 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 797 மதுபாட்டில்கள், 525 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story