உரிமையாளர்களிடம் ரூ.82 ஆயிரம் அபராத வசூல்
மின் இணைப்புகள் தவறாக பயன்படுத்திய உரிமையாளர்களிடம் ரூ.82 ஆயிரம் அபராத வசூல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை நகரிய செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சை நகரிய அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர கூட்டுக் குழுக்கள் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்தன. இதில், 971 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, 5 மின் இணைப்புகள் தவறாகப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு, அபராத தொகையாக உரிமையாளர்களிடம் இருந்து ரூ.82 ஆயிரத்து 781 வசூல் செய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story