கரூர் மாவட்டத்தில் 83 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


கரூர் மாவட்டத்தில் 83 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

கரூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி 83 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து, 15 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கரூர்

புகையிலை பொருட்கள் பறிமுதல்

கரூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த 16 மற்றும் 17-ந்தேதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.இச்சோதனையில் மூலம் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 83 கிலோ எடை உள்ள ரூ.76 ஆயிரத்து 84 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நடவடிக்கை எடுக்கப்படும்

குட்கா பொருட்களை விற்பனை செய்த 15 கடைகள் உணவு பாதுகாப்பு துறை மூலம் மூடி சீல் வைக்கப்பட்டது. சட்ட விரோதமாக பொதுஇடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களுக்கு அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story