திற்பரப்பில் 83.6 மி.மீ. பதிவு
குமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையில் அதிகபட்சமாக திற்பரப்பு பகுதியில் 83.6 மில்லி மீட்டர் பதிவானது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையில் அதிகபட்சமாக திற்பரப்பு பகுதியில் 83.6 மில்லி மீட்டர் பதிவானது.
மழை
குமரி மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் திடீரென மழை பெய்தது. குடியிருப்பு பகுதிகளில் மிதமான மழையாகவும், மலையோர பகுதிகளில் பலத்த மழையாகவும் பெய்தது. திடீரென பெய்த மழையால் பல இடங்களில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பதிசாரம் பகுதியில் பெய்த மழையால் திருவாழ்மார்பன் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது. கோவில் ஊழியர்கள் வெள்ளத்தை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த மழை அதிகபட்சமாக திற்பரப்பு பகுதியில் 83.6 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் பதிவான மழை மில்லி மீட்டரில் வருமாறு:-
பூதப்பாண்டி-3.5, களியல்-16.4, கன்னிமார்-2.2, குழித்துறை-2.6, மயிலாடி-7.4, நாகர்கோவில்-28.6, புத்தன்அணை-7, சுருளகோடு-8.4, தக்கலை-47.2, இரணியல்-32, பாலமோர்-9.8, ஆரல்வாய் மொழி-7.4, கோழிப்போர்விளை-75.5, அடையாமடை-7.6, குருந்தன்கோடு-31.6, ஆனைக்கிடங்கு-32, பேச்சிப்பாறை-1, பெருஞ்சாணி-7.6, சிற்றார் 1-37.2, சிற்றார் 2-38.6, மாம்பழத்துறையாறு-35, முக்கடல்-1.3 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
அணைகள் நிலவரம்
மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 378 கனஅடி தண்ணீர் வந்தது. இதுபோன்று பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 99 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 61 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 85 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 2 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 584 கனஅடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 175 கனஅடியும் தண்ணீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டு உள்ளது.