திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 86.38 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி


திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 86.38 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
x

திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 86.38 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 86.38 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

பிளஸ்-1 பொதுத்தேர்வு

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் கடந்த வாரம் ஒரே நாளில் வெளியாகின. இந்த நிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவுபெற்றது. இதைத்தொடர்ந்து பிளஸ்-1 தேர்வு முடிவு நேற்று வெளியானது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 215 பள்ளிகளை சேர்ந்த பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்காக 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இவற்றில் 10 ஆயிரத்து 899 மாணவர்கள், 11 ஆயிரத்து 671 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 570 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர்.

86.38 சதவீதம் தேர்ச்சி

இவர்களில் 8 ஆயிரத்து 599 மாணவர்கள், 10 ஆயிரத்து 896 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 495 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 86.38 சதவீதம் ஆகும். அதேநேரம் 2 ஆயிரத்து 300 மாணவர்கள், 775 மாணவிகள் என மொத்தம் 3 ஆயிரத்து 75 பேர் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மாணவர்களில் 78.90 சதவீதம் பேரும், மாணவிகளில் 93.36 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர். அந்த வகையில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பிளஸ்-1 தேர்வு முடிவை தெரிந்து கொள்வதற்காக மாணவ-மாணவிகள், தாங்கள் பயின்ற பள்ளிகளில் குவிந்தனர். அதோடு தேர்வு முடிவு வெளியானதும் செல்போனில் ஆர்வமுடன் மதிப்பெண் விவரத்தை பார்த்தனர். மேலும் சக மாணவ-மாணவிகள் எடுத்த மதிப்பெண்களை கேட்டு தெரிந்து கொண்டனர். அதில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்களும், சக மாணவர்களும் பாராட்டினர்.


Next Story