திருச்சி விமான நிலையத்தில் ரூ.8.66 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் ரூ.8.66 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x

திருச்சி விமான நிலையத்தில் ரூ.8.66 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது நாகப்பட்டினத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 42) என்பவர் தன்னுடைய உள்ளாடையில் மறைத்து வைத்து பேஸ்ட் வடிவிலான 140 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 8.66 லட்சம் ஆகும்.


Next Story