ரூ.87½ லட்சம் உண்டியல் காணிக்கை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.87½ லட்சம் உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உபகோவில்களில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் மாதம் ஒரு முறை திறந்து எண்ணப்படும். அதன்படி நேற்று அனைத்து கோவில்களில் உண்டியல்கள் திறந்து மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. அதில் 87 லட்சத்து 68 ஆயிரத்து 310 ரூபாயும், 540 கிராம் தங்கமும், 725 கிராம் வெள்ளி ஆகியவை கிடைக்க பெற்றன. கோவில் துணை கமிஷனர் அருணாசலம் தலைமையில் நடந்த இந்த பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story