பிளஸ்-1 பொதுத்தேர்வில் 87.41 சதவீதம் பேர் தேர்ச்சி
பிளஸ்-1 பொதுத்தேர்வில் 87.41 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
புதுக்கோட்டை:
87.41 சதவீதம் பேர் தேர்ச்சி
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 175 பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 225 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுதினர். இதில் 17 ஆயிரத்து 678 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 87.41 சதவீதம் ஆகும்.
கல்வி மாவட்டம் வாரியாக அறந்தாங்கியில் 3 ஆயிரத்து 444 மாணவர்களில் 2 ஆயிரத்து 801 பேரும், 3 ஆயிரத்து 576 மாணவிகளில் 3 ஆயிரத்து 395 பேரும் என 6 ஆயிரத்து 196 பேர் தேர்ச்சி பெற்றனர். இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 753 மாணவர்களில் 2 ஆயிரத்து 124 பேரும், 2 ஆயிரத்து 824 மாணவிகளில் 2 ஆயிரத்து 618 பேரும் என 4 ஆயிரத்து 742 பேர் தேர்ச்சி பெற்றனர்.
மாணவிகள் முன்னிலை
புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 559 மாணவர்களில் 2 ஆயிரத்து 933 பேரும், 4 ஆயிரத்து 69 மாணவிகளில் 3 ஆயிரத்து 807 பேரும் என 6 ஆயிரத்து 740 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த மாணவர்கள் 9 ஆயிரத்து 756 பேரில் 7 ஆயிரத்து 858 பேரும், 10 ஆயிரத்து 469 மாணவிகளில் 9 ஆயிரத்து 820 பேரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விட மாணவிகளே முன்னிலை வகித்தனர்.
பிளஸ்-1 பொதுத்தேர்வில் மொத்தம் 39 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. இதில் அரசு பள்ளியில் அம்மாபட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற 38 பள்ளிகளும் தனியார் பள்ளிகள் ஆகும்.
ஆர்வமுடன் பார்த்தனர்
தேர்வு முடிவுகள் வெளியானதும் அந்த விவரம் அந்தந்த பள்ளிகளில் அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்பட்டன. பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் தற்போது அதே பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகின்றனர். இதனால் தேர்வு முடிவுகளை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பட்டியலை வைத்து ஆசிரியை ஒருவர் அந்த விவரத்தை கூறினார். மேலும் சிலர் செல்போனில் இணையதளம் மூலமாக தேர்வு முடிவுகளை பார்த்தனர்.