விதிமுறைகளை மீறிய 88 வாகனங்களுக்கு அபராதம்


விதிமுறைகளை மீறிய 88 வாகனங்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 8 Nov 2022 11:28 PM IST (Updated: 8 Nov 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

விதிமுறைகளை மீறிய 88 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

விதிமுறைகளை மீறிய 88 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

புதிய நடைமுறையின்படி 'ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்வோர்களுக்கு அபராத தொகை ரூ.100-லிருந்து ரூ.1,000 ஆகவும், சிக்னலை மதிக்காமல் வாகனங்களில் செல்வோர்களுக்கு ரூ.100-லிருந்து ரூ.500 ஆகவும், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000, காரில் 'சீட்' பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.100-லிருந்து ரூ.1,000. என அபராத கட்டணம் விதிக்கப்பட்டு வருகிறது.

வித்தவுட் ரெஜிஸ்ட்ரேஷன், வித்தவுட் லைசன்ஸ் உள்ளிட்டவைகள் இல்லாமல் இருந்தால் அபராத தொகை வசூலித்து வருகின்றனர்.

ஜோலார்பேட்டையில் உள்ள ஜங்ஷன் பஸ் நிறுத்த பகுதியில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் இருத்தல் செல்போன் பேசிய படி வாகன ஓட்டுதல்உள்ளிட்ட 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 75.400 ஆயிரம் ரூபாய் அபராத கட்டணம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.


Next Story