89 வழக்குகளில் ரூ.4¼ கோடிக்கு சமரசம்


89 வழக்குகளில் ரூ.4¼ கோடிக்கு சமரசம்
x

89 வழக்குகளில் ரூ.4¼ கோடிக்கு சமரசம் செய்யப்பட்டது.

திருச்சி

திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கே.பாபு உத்தரவின் பேரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருச்சி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் மற்றும் மணப்பாறை, துறையூர், லால்குடி ஆகிய 4 இடங்களில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 4 அமர்வுகளில் குற்றவியல் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், தொழிலாளர் இழப்பீட்டு வழக்குகள், குடும்பநல வழக்குகள், இடப்பிரச்சினை சம்பந்தமான வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள் என்று 173 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் இரு தரப்பினரையும் நீதிபதிகள் அழைத்துப் பேசி சமரசம் செய்து 89 வழக்குகளில் ரூ.4 கோடியே 31 லட்சத்து 11 ஆயிரத்து 824-க்கு சமரசம் காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் (பொறுப்பு) மணிகண்டராஜா செய்திருந்தார்.


Next Story