89 லட்சத்தில் 4 பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடம்


89 லட்சத்தில் 4 பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடம்
x

89 லட்சத்தில் 4 பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடம் கட்ட அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியத்தில் உள்ள பூட்டுத்தாக்கு, கன்னிகாபுரம், மேலகுப்பம், டி.சி.குப்பம், அரப்பாக்கம், கீழ்மின்னல் ஆகிய ஊராட்சியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாவட்ட ஊராட்சி நிதி குழு மற்றும் கனிமவள நிதி திட்டத்தின் கீழ் ரூ.89 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஆற்காடு ஒன்றியக் குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத் தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு கூடுதல் பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் ரூ.7 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாமலை, பிரபாகரன், அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story