பிளஸ்-2 தேர்வில் 89.20 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி


பிளஸ்-2 தேர்வில் 89.20 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி
x

வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 89.20 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

வேலூர்

தேர்வு முடிவு வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 7,248 மாணவர்களும், 8,098 மாணவிகளும் என 15,346 பேர் எழுதினர். இதன் முடிவுகள் நேற்று வெளியானது. தேர்வு முடிவினை மாணவர்கள் செல்போனில் பார்த்தனர். பள்ளியிலும் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டிருந்தது. மாணவர்கள் பலர் அங்கு சென்று ஆர்வமுடன் பார்த்தனர்.

தேர்வு எழுதியவர்களில் 6,094 மாணவர்களும், 7,595 மாணவிகளும் என மொத்தம் 13,689 பேர் தேர்ச்சி பெற்றனர். 1,154 மாணவர்களும், 503 மாணவிகளும் என 1,657 பேர் தேர்ச்சி பெறவில்லை.

மாணவர்கள் 84.08 சதவீதம் பேர் தேர்ச்சியும், மாணவிகள் 93.79 சதவீதம் பேர் தேர்ச்சியும் பெற்றனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர்.

89.20 சதவீதம்

வேலூர் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 89.20 ஆகும். அரசு பள்ளிகளை பொருத்தமட்டில் வேலூர் மாதிரி பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. 24 தனியார் பள்ளிகளும், 2 சுய நிதி பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. தமிழக அளவில் வேலூர் மாவட்டம் 37-வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு கடைசி இடமான 38-வது இடத்தை பிடித்திருந்தது. இந்த ஆண்டு ஒரு இடம் முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கைதிகள்

வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் சிறையில் 6 கைதிகள் தேர்வு எழுதினர். இதில் ஒரு பெண் கைதியும், 2 ஆண் கைதியும் என 3 பேர் தேர்ச்சி பெற்றனர். சுலோச்சனா என்பவர் 500 மதிப்பெண்களும், மற்ற இரு ஆண் கைதிகளும் 400-க்கு மேலும் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றனர்.


Next Story