சேலம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் 89.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சி


சேலம் மாவட்டத்தில்  10-ம் வகுப்பு தேர்வில் 89.47 சதவீத   மாணவர்கள் தேர்ச்சி
x

சேலம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் 89.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சேலம்

சேலம்,

89.47 சதவீதம் தேர்ச்சி

தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பில் நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 536 பள்ளிகளை சேர்ந்த 21 ஆயிரத்து 846 மாணவர்கள், 21 ஆயிரத்து 371 மாணவிகள் என மொத்தம் 43 ஆயிரத்து 217 பேர் தேர்வு எழுதினர். இவர்களில், 18,611 மாணவர்கள், 20,054 மாணவிகள் என மொத்தம் 38 ஆயிரத்து 665 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.47 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

அதாவது, மாணவர்கள் 85.19 சதவீதமும், மாணவிகள் 93.84 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி 8.65 சதவீதம் அதிமாகும். மாவட்டத்தில் 24 அரசுபள்ளிகள் உள்பட 143 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

அரசு பள்ளிகளில்

இதேபோல, மாவட்டத்தில் 294 அரசு பள்ளிகளை சேர்ந்த 24 ஆயிரத்து 420 மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் 9,249 மாணவர்கள், 11,687 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 936 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 85.70 ஆகும்.

மாவட்டத்தில் 34 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நடந்த 10-ம் வகுப்பு தேர்வில் 86.76 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவற்றில் 3 நிதியுதவி பெறும் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாற்றுத்திறனாளிகளில் 321 பேர் எழுதினர். அவர்களில் 288 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.71 சதவீத தேர்ச்சி ஆகும்.

இதனிடையே, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அவரவர் பள்ளிக்கு சென்று தங்களது மதிப்பெண்களை பார்த்து தெரிந்து கொண்டனர். அதேசமயம், தேர்வு முடிவுகள் பள்ளி மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story