8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
வேதாரண்யம் அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த பன்னாள் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் சேகர் (வயது34). விவசாய கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று 8-ம் வகுப்பு மாணவி ஒருவரை தனது வீட்டின் குளியல் அறையில் தண்ணீர் வருகிறதா? என்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார். அப்போது சேகர், அந்த மாணவியை பின் தொடர்ந்து சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில் மாணவின் தாய் வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story