சாணார்பட்டி அருகே கதம்ப வண்டுகள் கடித்து 9 பக்தர்கள் காயம்


சாணார்பட்டி அருகே கதம்ப வண்டுகள் கடித்து 9 பக்தர்கள் காயம்
x

சாணார்பட்டி அருகே கதம்ப வண்டுகள் கடித்து 9 பக்தர்கள் காயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே கருப்பம்பட்டியில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று அப்பகுதியை சேர்ந்த சிலர் சாமி கும்பிட சென்றனர். அப்போது அங்கிருந்த கதம்ப வண்டுகள் கோவிலுக்கு வந்தவர்களை விரட்டி, விரட்டி கடித்தது. இதில் கோவிலுக்கு சென்ற முத்துவீரன் (வயது 82), கந்தசாமி (59), பாலகிருஷ்ணன் (19), குமரேசன் (55), சத்யா (9), சதீஷ் (27), அழகுபிள்ளை (33), தனலட்சுமி (45), மலர்விழி (21) ஆகிய 9 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொசவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் அசோக் குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

மேலும் இதுகுறித்து சாணார்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கதம்ப வண்டுகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் கருப்பம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story