ரூ.65¾ லட்சத்தில் 9 குப்பை சேகரிக்கும் வாகனங்கள்


ரூ.65¾ லட்சத்தில் 9 குப்பை சேகரிக்கும் வாகனங்கள்
x
தினத்தந்தி 25 Jun 2023 12:15 AM IST (Updated: 25 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் நகராட்சியில் ரூ.65¾ லட்சத்தில் 9 குப்பை சேகரிக்கும் வாகனங்களை நகர் மன்ற தலைவர் தொடங்கி வைத்தர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சிக்கு ரூ.65.70 லட்சம் செலவில் 15-வது நிதிக்குழு மானியத்தில் இருந்து திடக்கழிவு மேலாண்மை பணிக்கு 9 குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வாங்கப்பட்டது இந்த வாகனங்களை பயன்பட்டிற்கு விடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் புகழேந்தி கலந்து கொண்டு வாகனங்களை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹீம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர். பின்னர் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றது.இது குறித்து நகராட்சி ஆணையர் ஹேமலதா கூறுகையில், வேதாரண்யம் நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை பணிக்கு 15-வது மானிய நிதியில் இருந்து ரூ.65 லட்சத்து 70 ஆயிரம் செலவில் 9 குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இது மூலம் நகராட்சியில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிந்து தினந்ததோறும் 12 டன் குப்பைகள் அள்ளப்பட்டு நகராட்சி குப்பை சேகரிக்கும் மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு குப்பைகளை தரம் பிரித்து பின்பு உரமாக்கி சலுகை விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மேலும் நகராட்சி பகுதியில் இனி குப்பைகள் தங்கமால் உடனுக்குடன் அள்ளப்படும். குப்பைகளை சாலையில் கொட்டாமல் வீடு தேடி வரும் நகராட்சி வாகனத்தில் வழங்க வேண்டும் என்றார்.


Next Story