ஈரோடு மாவட்டத்தில் 9 பேருக்கு தொற்று:கொரோனாவுக்கு 46 பேர் சிகிச்சை
ஈரோடு மாவட்டத்தில் 9 பேருக்கு தொற்று: கொரோனாவுக்கு 46 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனா்
ஈரோடு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக புதிதாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில் நேற்று முன்தினம் 7 பேருக்கு தொற்று உறுதியானது.
இந்த நிலையில் நேற்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 788 ஆக உயர்ந்தது. இதில் ஓரு லட்சத்து 36 ஆயிரத்து 8 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 3 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தினமும் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 46 ஆக உயர்ந்தது. இதுவரை கொரோனாவுக்கு 734 பேர் பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story