"அரசு பள்ளிகளில் புதிதாக 9 லட்சம் மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர்"- அமைச்சர் அன்பில் மகேஷ்


அரசு பள்ளிகளில் புதிதாக 9 லட்சம் மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர்- அமைச்சர் அன்பில் மகேஷ்
x

அரசு பள்ளிகளில் புதிதாக 9 லட்சம் மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.

சென்னை,

சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளியளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு ரூ.3ஆயிரம் கல்வி ஊக்கத்தொகையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது,

இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதல்-அமைச்சர் என்றால் அது நம் முதல்-அமைச்சர் தான். கல்விக்கு ஏராளமான திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் பள்ளிக்கல்விக்காக ரூ.38 ஆயிரம் கோடியை முதல்-அமைச்சர் ஒதுக்கியிருக்கிறார்.

அரசுப்பள்ளிகள் மீது அதிக கவனம் செலுத்திவருவதன் காரணமாக, நடப்பு கல்வியாண்டில் 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்திருக்கின்றனர். இதற்கு காரணம் அரசின் திட்டங்கள்தான்.

ஒவ்வொரு குழந்தைக்கென்று தனித்திறமை உண்டு. அத்தனித்திறனை அடையாளம் கண்டு, அதை பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும். கல்வித்துறையின் பொற்காலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி இருந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story