நன்னடத்தை பிணையை மீறியவருக்கு 9 மாதம் சிறை தண்டனை


நன்னடத்தை பிணையை மீறியவருக்கு 9 மாதம் சிறை தண்டனை
x

நெல்லையில் நன்னடத்தை பிணையை மீறியவருக்கு 9 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி ரெயில்வே லைன் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 34). இவர் மீது சேரன்மாதேவி போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்கு உள்ளது. இந்த நிலையில் ராஜ்குமாருக்கு 2-ம் வகுப்பு நிர்வாக துறை நடுவரால் ஒரு வருடத்திற்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டது. இந்த நிலையில் அவர் நன்னடத்தை பிணையை மீறி செயல்பட்டதால் சேரன்மாதேவி போலீசார் நெல்லை 2-ம் வகுப்பு நிர்வாக துறை நடுவர் முன்பு அறிக்கை சமர்ப்பித்தனர். அதன் மீது விசாரணை நடத்திய நடுவர், பிணையை மீறி குற்ற செயலில் ஈடுபட்ட ராஜ்குமாருக்கு 9 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.



Next Story