தமிழகத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா
x

தமிழகத்தில் இன்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 5 பேர், பெண்கள் 4 பேர் அடங்குவர்.புதிய பாதிப்பு பட்டியலில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை, தேனி, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் தலா ஒருவரும், மதுரையில் 2 பேரும் இடம் பெற்றனர். 31 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு இல்லை.தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. 53 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.


Next Story